Mother’s Day Celebrations at ISKCON – Coimbatore

Mother’s Day celebrations were held today at the ISKCON, Coimbatore premises. During this festival, the mothers of Coimbatore were invited to the temple and a special Gomata Puja was performed for their welfare.
Special guests at the event were the nurses who have made outstanding contributions during the last pandemic, gynecologists, women entrepreneurs, as well as women engaged in social services. The list included Kamalathal Patti known for her Rs.1 iddlies.

His Holiness Bhakti Vinoda Swami Maharaj, Zonal Secretary ISKCON, during his discourse lauded the service offered by these enlightened and empowered souls and explained the unique unconditional love of a mother in the context of verses from Bhagavad Gita and Srimad Bhagavatham. He quoted examples of how even a Sannyasi performs duties towards Mother to set an example of our rich culture. He explained that unconditional love towards the Supreme Personality of Godhead Sri Krishna would help us all to overcome the sufferings and to renew our eternal relationship with God.

The invitees were facilitated with Pavitha Malas, Shawls & gifts and the celebration ended with a sumptuous prasadam feast.

ஹரே கிருஷ்ணா !!!

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான்(ISKCON) கோவில் சார்பாக இஸ்கான்(ISKCON) வளாகத்தில் இன்று அன்னையர் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை வாழ் அன்னையர்களை திருக்கோவிலுக்கு அழைத்து கௌரவித்து அவர்களுக்காக சிறப்பு கோமாதா பூஜையும் செய்யப்பட்டது இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கடந்த கொரோனோ காலத்தில் அரசு மருத்துவ மனையில் சிறப்பாக பங்காற்றிய செவிலியர் களையும் மற்றும் பல பெண் மருத்துவர்களையும் பல தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கும் பெண்களையும், சமுதாயத்தில் மேலும் பல சமூக சேவைகள் செய்து வரும் பெண்களையும், குறிப்பாக வயதில் மூத்த இட்லி பாட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் “உயர் திருமதி கமலாத்தாள் பாட்டி” அவர்களையும் கௌரவிக்கபட்டது

இவ்விழாவானது இன்று காலை சரியாக காலை 7.35 மணியளவில் துவங்கப்பட்டது . இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தவத்திரு . பக்தி வினோத ஸ்வாமி மஹராஜ் அவர்கள் தலைமையில் உயர்திரு மது கோபால் தாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி அவர்கள் அன்னையர் தின விழா சிறப்புரையாற்றினார் .
சிறப்புரையில் தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி மஹராஜ் அவர்கள் அன்னையர்களின் முக்கியத்துவத்தையும் அன்னையர்களின் தூய அன்பை பற்றியும் அன்னையர்களின் பெருமைகளையும் மிக அழகாகவும் ஆழ்ந்த கருத்துக்களையும் அற்புதமாக பின்வருமாறு குறிப்பிட்டார்.
நம் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஏழு அன்னையர்கள் உள்ளனர் 1.நம்மைப் பெற்றெடுத்த தாய். 2.ஆன்மீக குருவின் பத்தினி .
3.ஒரு தூய பிராமணரின் பத்தினி.
4.அரசரின் மனைவி. 5.கோமாதா (பசு)
6.பூமாதா (பூமி த்தாய்)
7.தாதிமாதா ( செவிலியர்)

“இவ்வுலகில் ஒவ்வொருவரும் அன்பை செலுத்த விரும்புகிறோம். அன்பை பெற முயற்சிக்கிறோம். அன்பைப் பெறுவதற்கும் செலுத்துவதற்கும் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு அன்னையர்களே நமக்கு உகந்தவர்கள் ஆவர். அன்னையர்கள் மட்டுமே இயற்கையாகவே ஒரு குழந்தை மேல் அன்பைப் பொழிகிறார்கள். இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் மற்றவர்களை விரும்புகிறார்கள் இது அன்பு அல்ல இது ஒரு விதமான காமம் ஆகும்.
தாய் அன்பு மட்டும்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கலப்படமில்லாத தூய அன்பாகும். இதுவே தாய் அன்பின் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு தாய்க்கும் இந்த சக்தி உள்ளது. தாயிடம் அன்பை செலுத்துவதும், அன்பை பெறுவதும் உன்னதமானதாகும்.
அன்னையர் தினமான இன்று ஒவ்வொரு அன்னையரையும் முழு அதிகாரம் கொடுத்து கௌரவித்து அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும். இதை ஒரு சங்கல்பம் ஆக ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நமது தாய் மட்டும் அல்ல ஏழு விதமான தாய்களும் நம்மீது அன்பை பொழிகிறார்கள். குறிப்பாக பூமாதாவும்( பூமி) மற்றும் கோமாதாவும் (பசு) நமக்கு பல வழிகளில் அன்பைப் பொழிகிறார்கள்.. நாம் பிரதியுபகாரமாக பசுவையும் பூமியையும் பாதுகாத்திட வேண்டும் தாய்மை என்பது ஒரு வரம் ஒவ்வொரு பெண்களும் பெற்றிட வேண்டும் அனுபவித்து விட வேண்டும் துரதிஷ்டவசமாக பல குழந்தைகளுக்கு தாய் யார் என்றே தெரியாமல் தாய் அன்பிற்காக ஏங்குகிறார்கள் கலியுகத்தில் இக்காலத்தில் தன் உடல் அழகை பேணிப் பாதுகாத்திட சில பேர் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக வாடகைத் தாய மூலமாக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மேலும் பல குழந்தைகள் தாயின் அன்பிற்காக ஏங்கும் பொழுது சில தாய்மார்கள் தங்களுடைய அலுவல்களில் உள்ள அழுத்தத்தாலும்பொறுப்புகளாலும் உள்ள தங்களது பொன்னான நேரத்தை செலவிடுவதால் தங்களது குழந்தைகளின் மேல் அன்பு செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போவது மிகவும் வருத்தத்திற்க்கு உரியதாகும் ஒவ்வொருவரும் பல விஷயங்களை பொறுத்துக்கொண்டு இருந்தாலும் தன் தாயைப் பற்றி இழிவாகப் பேசினால் யாருமே பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் இது தாயின் மேல் உள்ள அன்பால் ஏற்படும் நிலையாகும் ஒவ்வொருவருக்கும் தன் தாயின் மேல் உள்ள உறவு மிகவும் மரியாதைக்குறியதும் போற்றப்பட கூடியதும் வணங்கப்பட கூடியதுமாகும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு பலப்படுத்த நாம் ஒவ்வொருவரும் தன் தாயின் மேல் செலுத்தும் அன்பு நமக்கு உதவும் ஏனெனில் தாய் நம்மிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை அதுபோலவே நாமும் பகவானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய பக்தியோடு பக்தி செய்ய வேண்டும் மற்ற அனைத்து உறவு முறைகளிலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு நாம் மற்றவரை நேசிக்கின்றோம் இதனால் பிரச்சனைகள் உண்டாகிறது இது உண்மையான பிரேமம் அல்ல இது காமமாகும் இவ்வுலகில் ஒவ்வொரு ஆத்மாவும் தூய அன்புக்காக ஏங்குகிறது சந்நியாசியாக இருந்தாலும்கூட அவர் அவருடைய தாய்க்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சன்னியாசியாக இருந்தாலும் தனது தலைக்கு பல பணிவிடைகள் செய்து வந்தார் சங்கராச்சாரியார் அவர்களும் தனது தாய்க்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்து வந்தார் மேலும் நானும் நானும் சந்நியாசம் ஏற்று பகவத் கீதை மற்றும் பாகவதம் ஸ்ரீல பிரபுபாதர் புத்தகங்கள் வழியாக தொண்டாற்றி வருகிறேன் இருந்தாலும் எனக்கும் என் தாய் மீது மிகவும் மரியாதையும் அன்பு உண்டு நானும் எனது தாய்க்கு பல பணிவிடைகளை செய்துள்ளேன். நமக்கும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள உறவு நித்யமானதாகும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் “நானே ஒவ்வொருவருடைய அப்பா ,அம்மா, தாத்தா அனைவரும் நானே என்று …

பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்… இந்த கட்டுண்ட உலகில் இருக்கும் ஒவ்வொரு ஜீவாத்மாக்கள் அனைவரும் என்னுடைய நித்தியமான அம்சங்கள் ஆவர்..
(பகவத் கீதை15.7)

“மன் மனா ப₄வ மத்₃ப₄க்தோ மத்₃யாஜீ மாம் நமஸ்குரு |
மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ(அ)ஸி மே ||

(பகவத் கீதை18-65 )
எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை
வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்பிப்பாயாக. இவ்வாறு நீ
என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும்
பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.

இந்நன்னாளில் அனைத்து அன்னையருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனைகளையும் அன்னையர் தின நல்வாழ்த்துக்களை கூறி பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நித்திய அம்சங்கள் ஆகிய நாம் அனைவரும் பகவானுடைய உறவை புதுப்பித்து தொடர்ந்து அன்புடனும், பக்தியுடனும், சேவைகள் செய்து பகவானின் பேரருளைப் பெற்றிடவோமாக…. இவ்வாறு தவத்திரு பக்தி வினோத ஸ்வாமி மஹராஜ் அவர்கள் தமது சிறப்புரையில் அன்னையர் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இறுதியாக அனைவருக்கும் மஹா பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை உயர்திரு. முரளி ஹஸ்த முகுந்த தாஸ் மற்றும் உயர்திரு. ஷிவாத்மா ஹரிதாஸ் அவர்களும் ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறந்த முறையில் செய்தனர்.