வாங்காளத்தின் சிறுபான்மையினரை பாதுகாக்க!

பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு உலகளாவிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து கீர்த்தனம்

23 அக்டோபர் 2021 (சனிக்கிழமை), மாலை 4.30 கோவை இஸ்கான் வளாகம்

கடந்த பத்து நாட்களில், பங்களாதேஷில் இந்து சமூகம் தாக்குதலுக்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே. இஸ்கான் மற்றும் பிற அமைப்புகளின் கோவில்களும், விக்கிரகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. துர்கா தேவியின் பூஜை பந்தல்கள் எரிக்கப்பட்டன. பங்களாதேஷ் நோகாஹாலியில் நடந்த வன்முறையில் இஸ்கான் பக்தர்கள் இருவர் உட்பட பலர், வெறித்தனமான கும்பலால் கொல்லப்பட்டனர். பல இந்துக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறிவைத்து எரிக்கப்பட்டன.

பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இத்தகைய வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலகளாவிய அளவில் போரட்டம் நடத்த இஸ்கான் அமைப்பு திட்டமிட்டுள்ளது. கோவை இஸ்கான் வளாகத்திலும் கீர்த்தனத்தின் மூலமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டனக் கூட்டம், சனிக்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது. இந்து சமூகத்தின் வலி மற்றும் துயரத்தினை உணர்த்த உலகளாவிய அளவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் சிறுபான்மையினருக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்று கோரியும் இந்த எதிர்ப்புக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த போராட்டம் எந்த மத சமூகத்திற்கும் அல்லது பங்களாதேஷ் நாட்டிற்கும் எதிரானதல்ல. அந்நாட்டின் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

நாம் பங்களாதேஷ் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன?

  1. இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர், தாக்குதல்கள் அல்லது அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகப் பயிற்சி செய்ய முடியும் என்பதை உறுதி செய்யவேண்டும்
  2. பங்களாதேஷ் அரசு உடனடியாக அனைத்து முறையான வழிமுறைகளையும் பயன்படுத்தி வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
  3. இந்த வன்முறைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் மூலம் தகுந்த அளவில் தண்டிக்கவேண்டும்.
  4. இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இந்த சமூகங்களின் கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *