எல்லாத் தொண்டுகளிலும், அன்ன தானம் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தானத்தில் உணவைப் பகிர்ந்தளிப்பவர் மூன்று வகையான கடன்களிலிருந்து விடுபட்டு, விஷ்ணுவின் திருநாட்டிற்குச் செல்கிறார் என்று கர்க சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் பவிஷ்ய புராணத்தில் கூறுகிறார், 'உயிருள்ள மற்றும் உயிரற்ற உலகம், உணவால் நிலைத்திருக்கிறது. உணவைக் கொடுப்பவர் உயிரைக் கொடுப்பவர், உண்மையில் மற்ற அனைத்தையும் கொடுப்பவர். எனவே, இவ்வுலகிலும் அதற்கு அப்பாலும் நல்வாழ்வை விரும்புபவன் உணவு கொடுக்க விசேஷ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்...'